ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார். இவரது மனைவி பார்வதம்மா (வயது 77). உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள எம்எஸ்.ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கியுள்ளன.
"ஆனால் தனது தாய் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக..." மருத்துவமனைக்கு வந்த அவரது மகனும், நடிகருமான சிவராஜ்குமார் தெரிவித்தார்.
பார்வதம்மாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் ராமைய்யா மருத்துவமனையில் ஒரு பதட்டமான சூழல் நிலவுகிறது. ஆகவே அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.